×

தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி மன்னை எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதம்

நீடாமங்கலம்: சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம். நேற்று அதிகாலை சுமார் 5.05 மணிக்குத்தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் வந்தது. சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் வந்ததால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் – கோவையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் காலை சுமார் 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ரயில் நேற்று காலை சுமார் 8 மணிக்கு மேல் நீடாமங்கலம் வந்தது. பின்னர் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. இதேபோல் எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் சுமார் ஒருமணிநேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர். தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால், எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்து சென்றதாக ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
பயணிகள் தவிப்பு

 

The post தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி மன்னை எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur District ,Mannai Express ,Needamangalam ,Chennai ,Mannargudi ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!